சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞ்சர் துஷார் மேத்தா_வை நீதிபதி நிறுத்தி வைத்து சபரிமலையில் வழங்கிய தீர்ப்பை ”முறையாக செயல்படுத்துங்கள்” சபரிமலை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீங்கள் செயல்படுத்தாமல் இருப்பதை ஒருநாளும் எங்களால் ஏற்க முடியாது எனவே முறையாக உங்களுடைய அரசிடம் சொல்லுங்கள் என்ற வார்த்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்லாம் என்ற தீர்ப்புக்கு எந்தவித தடையுமில்லை என்பது உறுதியாகியுள்ளது.