தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் பிரிந்தது. இவரின் இறப்பு தமிழக பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
