டெல்லியில் அதிகளவில் ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கேரளாவில் 16 பேர் என மொத்தம் 74 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிகளவில் ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் டெல்லியில் மூடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.