Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா பாதிப்புக்கு மருந்து – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் ….!!

கொரோனா பாதிப்புக்கு மருந்து உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,500 தாண்டியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா தொற்று 10,000க்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளது. உலகளவில் 2, 50,600த்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 90,000த்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8000 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில் அமெரிக்கா பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது.

சில நாட்களுக்கு முன்பு கூட செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டும் என்றும் , தடுப்பூசி சோதனை நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மலேரியா மருந்து கொரோனவை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்திருந்த டிரம்ப் , தற்போது கொரோனா பாதிப்புக்கு மருந்து தயார் என்று தெரிவித்துள்ளார்.

அதில் , அஸித்ரோமைசின் , ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். 2 மருந்தையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் உலக நாடுகள் பலவும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

Categories

Tech |