இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 13,925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,755ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,28,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 56,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 56,746 ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 26,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 14,536, ஹரியானா – 10,223 பேரும், கர்நாடகாவில் 8,697 பேரும், ஆந்திரா – 3,452, பீகார் – 7,533, தெலுங்கானா – 7,072, கேரளா – 3,039 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.