Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காட்டு தீயாய் பரவும் கொரோனா – மோடி எச்சரிக்கை ..!!

கொரோனா காட்டு தீ போல பரவுகின்றது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும். கொரோனா எதிர்ப்பில் தோல்வியடைந்ததற்கு, அந்த நாடுகளில் போதிய வளம் இல்லை என்று கூற முடியாது.

மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். காட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் பரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம் வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Categories

Tech |