தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய தகவலாக பார்க்கப்படுகிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்திருக்கிறார். 64 வயதான இவர் சென்னை ராயபுரத்தில் இருக்கக்கூடிய ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு நபர் துபாயில் இருந்து வந்திருக்கிறார். 43 வயதான இவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமான கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். முன்னதாக இன்று காலை சுமார் 11 மணியளவில் ஸ்பெயின் நாட்டில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனால் இன்று ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
#coronaupdate: 2 new positive cases of #Covid19. 64 Y F, traveled from California, under isolation at Stanley Med College. 43 Y M, returned from Dubai, under isolation at Tirunelveli Med College. Both the pts are stable. @MoHFW_INDIA #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இதில் முதல் நபரான காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழு குணமடைந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மற்ற 8 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் உடல் நிலை நன்றாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.