கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.
உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டிருக்கிறது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு வகையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் ஆக இது அமைந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியாவில் விமான நிலையங்களில் நடைபெறக்கூடிய சோதனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார்.
கொரோனா வைரஸ் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்ற ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய வார்த்தையையும் , அறிவுறுத்தலையும் அவர் நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் பல்வேறு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு துறைகளும் மாநில அரசுடன் இணைந்து செயல்படுகின்றன என்று மோடி தெரிவித்துள்ளார்.