Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை பந்த் – தடைகோரி மனு – அவசர வழக்காக ஐகோர்ட் விசாரணை…!!

கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் சிலிண்டர் வஃதேடிப்பு விபத்து தொடர்பாக ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த விவகாரம் தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பாஜகவின் நிர்வாகிகள் அழுத்தம் தருவதாகவும் குற்றசாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,  சிலிண்டர் வெடிப்பு  விகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின்கோரிக்கையை ஏற்ற நீதிபதி,  12:30 மணிக்கு பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கூடிய மனுவை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Categories

Tech |