முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் பகுதியில் இருந்து பிரவீன்குமார் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடிதத்தில் இருந்த செல்போன் எண் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அந்த நபர் எனது பெயர் பிரவீன் குமார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை செல்போன் சிக்னல் வைத்து போலீசார் தேடி வருகின்றனர். தமிழக முதல்வருக்கு இப்படிப்பட்ட தாக்குதல் மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.