ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரஸ்வதி போட்டியிட்டார். இவர் கான்சாபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கிய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார்கள். ஆனால் அப்போதைய நிலையில் தேர்தல் தடை பட்டதால் மீண்டும் துப்புரவு பணியில் மீண்டும் தற்காலிகமாக தொடர்ந்த நிலையில் தற்போது அதே பதவிக்கு போட்டியிட்டு 1013 வாக்குகள் பெற்று 113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.