Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கிய இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அவர் நேற்று தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த செய்தி ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தற்போது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |