தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.