அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் ஏற்கனவே வாதிடப்பட்டு இருந்தது. அதிமுக பொது குழு கூட்டப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறியிருந்தார். பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கி இருக்கிறது. அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது.