Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் எழுதி வெளியிட்டார்…!!

கொரோனா பரவி வரும் சூழலில் நடிகர் கார்த்திக் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர்.

அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நடிகர் கார்த்திக் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா சூழலில், மருத்துவர்கள் அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வெளியே இல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை அன்பு தம்பிகள் ஆகிய ரசிகர்கள் பின்பற்றி உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி உருக்கமாக எழுதியுள்ளார்.

Categories

Tech |