Categories
மாநில செய்திகள்

BREAKING : இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு ?

குரூப் 4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  ஆகஸ்ட் 25ஆம் தேதி 8,826 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்  எழுத்து தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சுமார் 47 ஆயிரம் பேர் தேர்வு ஆகினர். இதில் அடுத்தடுத்து தேர்வு எண்களில் உள்ள தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனால் இந்த புகார் தேர்வு  நடத்தும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்  மறுத்துள்ளது.இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் மாறுபடும் என்று டிஎன்யுஎஸ்ஆர்பி தெரிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளது .முழுமையான விவரம் வராமல் முறைகேடு என்பது சரியாக இருக்காது. இதற்குப் பிறகு உடல் தகுதிக்கான முடிவுகள் வழங்கப்பட்ட பிறகு அவர்கள் NCC , NSS   போன்றவற்றில் இருந்தால் அதற்கென்று தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும் .இதையெல்லாம் சேர்த்து இறுதி முடிவு வரும் பொழுது இந்த வரிசை  தொடர்ந்து அடுத்தடுத்து இருந்தால் முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதலாம். தமிழகத்தில் குரூப் 4 தேர்வு முறைகேடு  சர்சையை இந்த விவகாரம் தேர்வர்களை பேரதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.

 

Categories

Tech |