மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கு சுகாதார துறை சார்பில் கொரானா பரிசோதனை நடந்தது.
அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.