தமிழக அரசு பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எட்டாம் வகுப்பு பயின்று இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்று வழங்கப்படும்.
இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.