ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.
இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஓரளவு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத் ஆகிய ஏழு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.