Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 பேர் உயிரிழப்பு…. 10 பேர் கவலைக்கிடம்…. சென்னையில் சோகம்…..!!!!

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடுப்பேடு அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பெயரில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் காலை 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் ஓட்டுநர் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை கவனிக்காத ஓட்டுநரால் நிலை தடுமாறிய பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தின் இடது புறம் அமைந்திருந்த பெரும்பாலான பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி சம்பாவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |