அனைத்து வாகனங்களுக்கும் ’பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை. அதே சமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Categories
#BREAKING : 5 ஆண்டுகள் “பம்பர் டூ பம்பர்” இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்!!
