சென்னை அருகே நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வுக் கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இதற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Categories
BREAKING: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!
