Categories
மாநில செய்திகள்

BREAKING : 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டது…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது அவரது உடல் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இரண்டு அதிகாரிகளின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி ராணுவ வீரர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |