Categories
தேசிய செய்திகள்

BREAKING : சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் ….!!

சீனாவில் சிக்கி தவித்த 324 பேரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 259_ஆக  உயர்ந்துள்ளது. புதிதாக 1,982 பேர் இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 11,791 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் ,  பணியாளர்கள் என  அனைவரையும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை எடுத்து வந்த நிலையில் சீனாவின் அனுமதியை பெற்ற நேற்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் இந்திய அழைத்து வர  திட்டமிடப்பட்டு , 423 பேர் பயணிக்க கூடிய ஏர் இந்தியாவின் போயிங் பி747 டெல்லியில் இருந்து சீனா_வுக்கு  சென்றது.

இந்நிலையில் சீனாவில் இருந்து புறப்பட்ட 324 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்ட்னர். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு சிறப்பு முகாமில் தனிமைப் படுத்தப்படுவார்கள்.மனோசர் பகுதியில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |