கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
TNPSC குரூப் 4 முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவலில் இருக்கும் ஜெயகுமாரிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 2016 விஏஓ தேர்வில் இயான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 2 கிராம நிர்வாக அலுவலர் கைதாக்கியுள்ளனர். நெல்லை படலையார்குளம் விஏஓ பன்னீர்செல்வம், திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ செந்தில் ராஜ் கைது. இவர்கள் இருவரும் ஜயகுமாரிடம் தலா 7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.