Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில் காவல்துறையில் பணியாற்றிய 3 பேர் முறைகேடாக 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுவிடைத்தாள்களை முன்கூட்டிய பெற்று தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளிலும் அதிகாரிகளாக மாறியுள்ளனர்.

இந்த புகாரில் முக்கியமாக காவலர் ஒருவர் காவல் துறையில் காவலராக பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு குரூப்-4 தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய தாகவும், அதற்குப்பிறகு ஜெயில் செயலராக பணியாற்றி , அதன் பிறகு மீண்டும் TNPSC தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக பணியாற்றி தற்போது குரூப்-2 தேர்வு மூலம் சார்பதிவாளர் ஆக பணியாற்றி வருகிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த 2016ஆம் ஆண்டு நடந்த VAO தேர்வு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் TNPSCயிடம் கேட்டுள்ளனர் . அநேகமாக நாளை இதுகுறித்த ஆவணத்தை TNPSC வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில் 2016ஆம் ஆண்டில் இருந்தே முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |