20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவை பொருத்தவரை பல யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோன்ற யூடியூப் மற்றும் இணையதளங்களை முடக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
Categories
BREAKING : 20 யூடியூப் சேனல்கள்…. 2 இணையதளங்களை முடக்க…. மத்திய அரசு உத்தரவு….!!!
