கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் பிறக்கின்ற ஒவ்வொரு உத்தரவை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றனர்.
எனவே நாளை முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் காலை 7 மணியிலிருந்து 9 மணிவரையும் , மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரையும் மக்கள் பொருட்களை வாங்க வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.