திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் சில பகுதிகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மலைக் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மலைக்கோட்டை பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைக் கோவிலில் தீபம் ஏற்றுவோம் என இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.