Categories
மாநில செய்திகள்

#BREAKING : 120 கோடி கடன்…. பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை, நகைக்கடை கட்டடம் ஜப்தி..!!

கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் கடை  மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடை கட்டடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கக்கூடிய சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் இருக்கக்கூடிய சரவணா தங்க நகை மாளிகை கட்டடம் இந்தியன் வங்கி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.. அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடிக்கான கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் வரை இதற்கான அவகாசம் கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவகாசம் கொடுத்த பிறகும் நிலுவை தொகைக்கான 120 கோடி கடன்  தொகையை கட்டாத காரணத்தால் தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைப்பதற்கு நடவடிக்கையை இந்தியன் வங்கி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் மேற்கொண்டு வருகிறார்கள்..

மேலும் 19ஆம் தேதி (இன்று) வரை கடையில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருட்களை தற்போது வரை எடுக்காததால் வங்கி அதிகாரிகள் சிலமணிநேரம் அவகாசம் கொடுத்துள்ளார்கள்..

இதன் காரணமாக கடைக்கு வந்துள்ள ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.. தொடர்ந்து சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியன் வங்கி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |