Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: 100 மாணவர்கள் மயக்கம் – ஓசூரில் பெரும் பரபரப்பு ..!!

ஓசூர் காமராஜ் காலனியில் மாநகர நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சற்றுமுன் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம்  வந்ததாக தெரிகிறது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆறு, ஏழு, மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடுத்தடுத்து பொதுமக்களும் பெற்றோர்களும் வர தொடங்கினார்.

பள்ளி வகுப்பறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளியில் இருக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு  அங்கு இருக்க கூடிய மைதானத்தில் தங்க  வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்டு,  அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை விசாரணையில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்றுக் கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஜன்னல் வழியாக துர்நாற்றம் வீசியதாகவும், அது எது போன்ற துர்நாற்றம் என்று அவர்களால் கணிக்க முடியாத நிலையில் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |