Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10% இட ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞ்சர் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோபர் மூத்த வழக்கறிஞர்-  இவர் ராஜ்யசபா எம்.பிஆகவும் இருக்கிறார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோரெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் ? இந்த வழக்கு திமுக சார்பில் முதலாக போடப்பட்டது. இப்ப ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு  வழங்கி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% என்பது மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பின்பற்றபட்டு வருகிறது. தமிழக அரசு அமல்படுத்தாமல் இருக்கிறது. எனவே தற்போது நடைபெறும் ஆலோசனை மிகவும்  முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே நேற்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இந்த விஷயத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு இணைந்து போராடுவோம் என்று சொல்லி இருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இருக்காங்க. எனவே அனைத்து கட்சிகளின் கூட்டம் கூட்டப்படுமா ? என்பதை எல்லாம் வரக்கூடிய காலங்களில் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. இது தொடர்பான எல்லா அம்சங்களும் முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

Categories

Tech |