தமிழக பள்ளிகளில் ஓமைக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். வகுப்புகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடத்திக்கொள்ளலாம்.. பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இறைவணக்க கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது..