தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி 15 மாவட்டங்களில் 292 பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினமும் தயாரிக்கப்பட வேண்டும். காலை 7:45 மணிக்குள் சமையல் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.