Categories
மாநில செய்திகள்

1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!!

தற்போதைக்கு 1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்..

தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனே இருக்கின்றனர்.. இந்த சூழலில் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகளை எப்போது திறப்பார்கள் என்று கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை நடந்து வருவதாக கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.. அவர் கூறியதாவது, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர். பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை.
கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |