பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முக கவசம் வாங்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றும்படி சுகாதாரத்துறை அறிவித்து வருகின்றது. முகக் கவசம் அணிவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் ஷேர் ஆட்டோ ஒன்றில் முகக் கவசத்தில் மயக்க மருந்து தடவி கொடுத்து ஒரு பெண்ணின் பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து ஷேர் ஆட்டோ, பேருந்துகளில் திருவாத நபர்களிடமிருந்து முகக் கவசம் கொடுத்தால் அவற்றை தயவு செய்து வாங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.