Categories
மாநில செய்திகள்

BREAKING: வேலை இழந்தவர்களுக்கு ரூ.5000 வழங்க உத்தரவு…!!

வேலை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை இழந்த பணியாளர்களுக்கு ரூபாய் 5000 தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை கணக்கில் கொண்டு அவரவர் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி அதற்கான நிதியை விடுவிக்கவேண்டும். தீபாவளி போனஸ் தரப்பட்டது பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |