தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் பூண்டி ஏரியில் 23,500 கனஅடி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார்.
Categories
BREAKING: வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த முதல்வர்….!!!
