தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பெண் ஒருவரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணுக்கு புதிதாக வீடு கட்டி தரப்படும் என்று அறிவித்துள்ளார்.