Categories
தேசிய செய்திகள்

BREAKING: விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்…. பிரதமர் மோடி….!!!

2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதன்படி மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் இன்று முதல் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் எங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. எனவே விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |