ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சொக்கநாதன்புத்தூரில் உள்ள ஒரு தெருவில் திரும்பிய போது சப்பரம் ஒரு மரத்தில் மோதியுள்ளது. அப்போது அதிலிருந்து விழுந்த விளம்பரப் பலகையில் இருந்த ஒயர் வழியாக மின்சாரம் சப்பரத்தில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு தேர் விபத்தில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Categories
Breaking: விநாயகர் ஊர்வலத்தில் பெரும் விபத்து….. மரணம்…!!!!
