Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: விஜய் ரசிகர்களுக்கு செம செய்தி… போட்றா வெடிய…!!!

இந்தியாவில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் பதிவு செய்த செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் கடைபிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் செல்பி படம் ஒன்றை எடுத்தார். அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அந்த செல்பி படம் இந்த வருடம் ட்விட்டரில் அதிக அளவு பகிரப்பட்ட படமாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி படத்தை அவரின் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் இணைய தளத்தில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனைப் போலவே இந்த வருடம் அதிகம் லைக் வாங்கிய பிட்டர் பதிவாக, அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருந்தபோது விராட் கோலி செய்த ட்விட் முதலிடத்தில் இருக்கிறது.

Categories

Tech |