Categories
மாநில செய்திகள்

விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்புள்ளதா?… கேட்டு சொல்லுங்கள்… ஐகோர்ட் உத்தரவு !!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயில்களை மூடியிருக்கிறது.. நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கம்.. எனவே விஜயதசமி நாளன்று வெள்ளிக்கிழமை திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் படி தான் கோயில்கள் மூடப்பட்டுள்ளது.. விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு மூடப்பட்டிருக்கிறது என்று கூறினார்..

பின்னர் நீதிபதி, வெள்ளிக்கிழமை கொலு வைப்பதன் அடிப்படையிலும், துர்கா பூஜையின் அடிப்படையிலும் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது..எனவே வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறப்பதற்கும், கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதா என்று அரசின் விளக்கம் பெற்று 1:30 மணிக்குள் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |