Categories
மாநில செய்திகள்

BREAKING: வாக்குகளை பெற நிதி ஒதுக்கீடு கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா விடுதலை ஆகி தமிழகம் வந்துள்ளார்.

மேலும் தேர்தல் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மக்களுக்காக தான் இருக்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக ஊராட்சி தலைவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Categories

Tech |