Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான…. “10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்”… சுப்ரீம் கோர்ட்..!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது..

இதனை தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நீதிபதிகள் நாகேஸ்வரராவ் பி.ஆர் கவாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று கூறிய நீதிபதிகள் ஐகோர்ட் கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்..

 

Categories

Tech |