2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கறவை மாடுகள் பாரமரிப்பவர்கள், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75% மானியத்தில் தீவனம் நடப்பாண்டு முதல் வழங்கப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும் என்றார்..