Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்… ஆ.ராசா…!!!

முதல்வர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாய் பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் அதில் முதல்வரின் தாய் பற்றி அவதூறாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திமுக எம்பி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் பேசியது தவறு என்றும் முதலமைச்சர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன் எனவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |