ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு தரும். சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக அரசு ஒருபோதும் ஏற்காது என்று தெரிவித்துள்ளார்.