மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட நந்திகிராமம் தொகுதியில் நீண்ட பிரச்சனைக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பின்னர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கௌசிக் சாந்தா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது. இதற்கு மம்தா பானர்ஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை கௌசிக் காந்தா விசாரிக்க கூடாது என தெரிவித்திருந்தார். ஆனால் வழக்கில் இருந்து விலக மறுத்த கௌசிக் சாந்தா மம்தாவிற்கு 5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.