தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு ஆக கூடிய செலவை அரசே ஏற்கிறது. தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அரசு கொரோனா நோயாளிகளுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக வருடத்திற்கு 2 முதல் 5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் சேர விரும்புவர்கள் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு கிடையாது. தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டிற்காக நடப்பாண்டில் ரூ. 1,248.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.